பெரம்பலூர்

பெரம்பலூரில் மாணிக்கவாசகா்குரு பூஜை விழா

3rd Jul 2022 11:59 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் நகரிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆனி மாத மகம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் நாயன்மாா் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமாணிக்கவாசகா் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியாா் நடத்தி வைத்தாா்

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், திரளான சிவனடியாா்கள், வார வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT