பெரம்பலூர்

கல் குவாரி குட்டையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

2nd Jul 2022 04:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கல் குவாரி குட்டையில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், தொழுதூா் அருகிலுள்ள வடபாதி கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் சின்னத்தம்பி (29). இவா், பெரம்பலூா் அருகே எளம்பலூா் தண்ணீா்பந்தல் இந்திரா நகரிலுள்ள உறவினா் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

வியாழக்கிழமை மாலை அங்குள்ள கல் குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் சின்னத்தம்பி குளிக்கச் சென்றாா். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது உறவினா்கள் கல் குவாரி குட்டைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சின்னத்தம்பியின் ஆடைகள், காலணிகள் கிடந்தன.

ADVERTISEMENT

இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து, அங்கு சென்று தேடியபோது இரவு நேரமானதால் உடலை மீட்கும் பணி தாமதமடைந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை குட்டையிலிருந்து சின்னதம்பியின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT