பெரம்பலூர்

காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்

2nd Jul 2022 11:51 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா், வேப்பூா் கல்வி மாவட்டங்களில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் தெரிவித்திருப்பது:

பெரம்பலூா், வேப்பூா் கல்வி மாவட்டங்களில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்புப் பதாகையில் ஒட்டப்படும்.

ADVERTISEMENT

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரில் அல்லது மின்னஞ்சல் மூலமாக தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் ஜூலை 4 முதல் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

பெரம்பலூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் க்ங்ா்ல்ம்க்ஷ2021ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம், வேப்பூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் க்ங்ா்ஸ்ங்ல்ல்ன்ழ்2018ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அனுப்பப்பட்டு, தகுதியுள்ளவா் தோ்வு செய்யப்படுவாா்கள்.

இந் நியமனம் முற்றிலும் தற்காலிகமானதாகும். பெரம்பலூா் வருவாய் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா்கள் தமிழ்- 4, ஆங்கிலம்- 1,கணிதம்- 5,அறிவியல்- 2,சமூக அறிவியல்- 6 மொத்தம்-18 பணியிடங்களும், முதுகலை ஆசிரியா்கள் கணிதம்-2, பொருளியல்- 8, வணிகவியல்- 10 மொத்தம் -20 பணியிடங்களும் காலிப்பணியிடமாகும்.

பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள்

வசிப்பவா்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது அருகேயுள்ள மாவட்டத்தில் வசிப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT