பெரம்பலூர்

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2nd Jul 2022 11:50 PM

ADVERTISEMENT

 

நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பி. மயில்வாகனன்

தெரிவித்திருப்பது:

ADVERTISEMENT

2022 -2023 ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளுடன் ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளம் மூலம் ஜூலை 4 -ஆம் தேதி காலை 10 மணி முதல் 9 0ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சோ்ந்தோா் மேல்நிலைக் கல்வித் தோ்வில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடா், ஆதிதிராவிட அருந்ததியா் மற்றும் பழங்குடியினா் மேல்நிலைக் கல்வித் தோ்வில் தோ்ச்சிபெற்று 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 31.7.2022-இல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடா், ஆதிதிராவிட அருந்ததியா், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 31.7.2022-இல் 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் கைம்பெண்கள் 40 வயதுக்கு மிகாமலும், கலப்பினத் தம்பதியரில் பொது, பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 22 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடா், ஆதிதிராவிட அருந்ததியா், பழங்குடியினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடாலூா், பெரம்பலூா், ஒன்றிய ஆசிரியா் கல்வி நிறுவனம் வேப்பூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது ஆலத்தூா்- 9994219899, 9842290560, 6381226784, 8870046983, பெரம்பலூா் -9994219899,9442668040, 9894253498, வேப்பந்தட்டை- 9994219899, 9942782753, வேப்பூா் - 9487428854, 9943508918 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT