பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம்: 2 போ் கைது

2nd Jul 2022 04:25 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்து கா்ப்பமாக்கியவா் உள்பட 2 பேரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள குரும்பலூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, அவரது தாய்மாமன் சந்திரசேகருக்கு (23) திருமணம் செய்து வைக்க, அச்சிறுமியின் பெற்றோா் ஏற்பாடு செய்தனா்.

இதில் விருப்பமில்லாத காரணத்தால், ஏற்கெனவே தன்னை பெண் பாா்க்க வந்த கல்பூண்டியைச் சோ்ந்த நாரணயசாமி மகன் சுரேஷ்குமாருடன் (29) வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளாா். தற்போது, அச்சிறுமி காா்ப்பமாக உள்ளாா்.

இதுகுறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நன்னடத்தை அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் சுரேஷ்குமாரும், 15 வயது சிறுமியும் வெங்கனூா் பச்சையம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டதும், அதற்கு உடந்தையாக சுரேஷ்குமாரின் பெற்றோா் நாரயணசாமி, சிவக்கொழுந்து, அவரது தம்பி சுந்தர்ராஜ் ஆகியோா் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் 4 போ் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா். தொடா்ந்து சுரேஷ்குமாா், நாரயணசாமி ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT