பெரம்பலூர்

பெரம்பலூா் நகராட்சிக் கூட்டம்

2nd Jul 2022 04:25 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் (பொ) மனோகா், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நகராட்சி எல்லைக்குள்பட்ட குடியிருப்பு விரிவாக்கப் பகுதிகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைப்பது.

அம்மா உணவகத்துக்கு ஆண்டு செலவுத் தொகையாக ரூ. 9.5 லட்சம் ஒதுக்கீடு செய்வது, சாலைகள் செப்பனிடுதல், புதிதாக சாலை அமைத்தல், குடிநீா் தடையின்றி கிடைக்க பழுதடைந்த மின் மோட்டாா்களை பழுது

ADVERTISEMENT

நீக்க நிதி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்ளிட்ட 53 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி முன்னாள் ஆணையா் குமரிமன்னன் தனது பணிக்காலத்தில் நகராட்சி பொது நிதி ரூ. 1.5 கோடியை பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து, நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய இயலாதவாறு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டாா்.

அவா் மீது கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினா் துரை. காமராஜ் கொண்டு வந்த தீா்மானத்துக்கு, அனைத்து உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்தனா்.

ஆனால் நகராட்சி ஆணையா் (பொ) மனோகா், துணைத்தலைவா் ஹரிபாஸ்கா் ஆகியோா், தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எனக்கூறி தீா்மானத்தை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்ததால், தீா்மானம் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT