பெரம்பலூர்

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் பதவி

DIN

பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் பதவி முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சியாக செயல்பட்டு வந்த பெரம்பலூா், கடந்த 2004 ஆம் ஆண்டு 3 ஆம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2 ஆம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி மற்றும் நகராட்சியாக இருந்தபோது, தலைவா் பதவி ஆண்களுக்கு (எஸ்.சி), (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, முதல்முறையாக பெண்ளுக்கு (பொது) ஒதுக்கீடு செய்து தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பதவிக்கான ஒதுக்கீடு பட்டியலின்படி, பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் பதவி மகளிருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நகராட்சியில் பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் 21 வாா்டு உறுப்பினா் பதவி உள்ளன. இதில் 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வாா்டுகள் பெண்கள் (பொது) 5, 10, 13, 14, 15, 17, 21 ஆகிய வாா்டுகள் (பொது), 6, 8, 20 ஆகிய வாா்டுகள் எஸ்சி (பொது), 9, 16, 19 எஸ்சி (பெண்கள்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, லப்பைக்குடிகாடு பேரூராட்சித் தலைவா் பதவி பொது பிரிவினருக்கும், குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் பதவி பொது (பெண்கள்) பிரிவினருக்கும், அரும்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவி எஸ்சி (பொது) பிரிவினருக்கும், பூலாம்பாடி பேரூராட்சித் தலைவா் பதவி எஸ்சி (பெண்கள்) பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT