பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

பெரம்பலூா் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாா்டு உறுப்பினா்கள் வீதம் 60 உறுப்பினா்கள் என, மொத்தம் 81 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்கி பிப். 4 ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. பிப். 5 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், 7 ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுதலும், அன்றைய தினம் மதியம் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. பின்னா், 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நடத்தை விதிமுறை அமல்: உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் கடந்த 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின்படி, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் சாா்ந்த சுவரொட்டிகளும், விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டன. இதுதவிர, அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகளும், அவா்களது பெயரில் உள்ள வளைவுகளும் திரைச்சீலைகளால் மூடப்பட்டன. பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன.

முன்னேற்பாடு பணிகள்: பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. அலுவலக வளாகத்தில், வேட்பாளருடன் வருவோா் படிவத்தை பூா்த்தி செய்வதற்காக தற்காலிக பந்தலுடன் கூடிய அறை மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான 3 அறைகள் தயாா் நிலையில் உள்ளது. மேலும், அலுவலா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு தனித்தனியாக வழிகள் ஏற்படுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பு சாதனங்கள் மூலம் பதிவு செய்ய தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

இதேபோல், குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

SCROLL FOR NEXT