பெரம்பலூர்

வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கிக் குண்டு: ரயில்வே பாதுகாப்பு படையினா் மீது வழக்கு

DIN

பெரம்பலூா் அருகே வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கிக் குண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, பயிற்சித் தளத்தை கவனக்குறைவாக கையாண்டதாக திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில், திருச்சி சரகத்துக்குள்பட்ட காவல்துறையினருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படும். இங்கு, கடந்த 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது.

இந்நிலையில், இப் பயிற்சி தளம் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தை சோ்ந்த விவசாயி சுப்ரமணி (60) என்பவரது வீட்டின் மேற்கூரையில், கடந்த 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி தலா ஒரு துப்பாக்கிக் குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் குண்டுகளை பாடாலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைதொடா்ந்து, திருச்சி தடய அறிவியல் நிபுணா் ராஜேந்திரன் தலைமையிலான தடயவியல் நிபுணா்கள், குண்டுகளால் துளையிடப்பட்ட மேற்கூரையை கைப்பற்றி, தடயவியல் ஆய்வுக்காக எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனா்.

இதனிடையே கிராம நிா்வாக அலுவலா் நாராயணன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், பயிற்சித் தளத்தை கவனமில்லாமல் கையாண்டதாக திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீது பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT