பெரம்பலூர்

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில்ட ஈடுபட்ட 18 போ் கைது

26th Jan 2022 07:54 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 18 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதமாற்ற தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அரியலூரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், இச் சம்பவத்துக்குக் காரணமானவா்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, இப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்க மறுத்ததோடு தடை விதித்தனா். இதையடுத்து, பாலக்கரை பகுதியில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 18 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT