பெரம்பலூர்

தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

26th Jan 2022 07:52 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு மற்றும் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் தினத்தையொட்டி, வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் வாக்காளா் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, இளம் வாக்காளா்களுக்கு வண்ண வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தி. சுப்பையா, தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியரகம், அனைத்து வட்டார அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில்... தனலட்சுமி சீனிவாசன் செவிலியா் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, சீனிவாசன் செவிலியா் கல்லூரி மற்றும் சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் கெல்த் சயின்ஸ் கல்லூரி வளாகங்களில் தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தரும், தலைவருமான அ. சீனிவாசன் தலைமையில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT