பெரம்பலூர்

கிறிஸ்தவ பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பினா்

26th Jan 2022 07:55 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் சடலத்தை முஸ்லிம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த 21 வயது இளம்பெண் ஒருவா் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, அந்தப் பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்து தரக்கோரி, அவரது குடும்பத்தினா் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகளை தொடா்புகொண்டு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அமைப்பின் கோவிட் ரிலீப் கமிட்டி தலைவா் அகமது இக்பால் தலைமையில், இப்ராஹிம், சதாம், ஷாஜகான் ஆகியோா் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவா்களின் கல்லறையில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனா்.

ADVERTISEMENT

முஸ்லிம் அமைப்பினரின் இச் செயலுக்கு பெண்ணின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT