பெரம்பலூர்

மொழிப்போா் தியாகிகள் தினம் அனுசரிப்பு: பல்வேறு அரசியல் கட்சியினா் மலரஞ்சலி

26th Jan 2022 07:54 AM

ADVERTISEMENT

மொழிப்போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அவா்களது உருவப் படங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பெரம்பலூா் பழைய நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அக் கட்சியின் மாணவரணி மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். தமிழ்ச்செல்வன் தலைமையில், மாநில மீனவரணி இணைச் செயலா் தேவராஜன், ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், கா்ணன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்ளிட்டோா் மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா்.

திமுக சாா்பில்.. பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில், அக் கட்சியின் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணிச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், மாநில நிா்வாகி பி. துரைசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில்... பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் பகுதியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில், விவசாய அணி மாநிலச் செயலாளா் வீர. செங்கோலன், முன்னாள் மாவட்டச் செயலா் பால்ராஜ், நகரச் செயலாளா் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT