பெரம்பலூர்

பெரம்பலூா் காவல் கண்காணிப்பாளா்அலுவலகம் முற்றுகை

25th Jan 2022 04:07 AM

ADVERTISEMENT

குற்றச் செயல்களில் தொடா்புடைய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

வேப்பந்தட்டை வட்டம், காரியானூா் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காரியானூா் கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் விலை உயா்ந்த பொருள்கள் ஆகியவற்றை திருடும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகிறது. சட்டவிரோதமாக கள்ளச் சாராய விற்பனையும் நடைபெறுகிறது. சமூக விரோதிகள் சிலா் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டி பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனா். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும்போது துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை மிரட்டுகின்றனா்.

இதனால், பொதுமக்கள் நாள்தோறும் அச்சத்துடன் வாழ வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, இச் சம்பவங்களில் தொடா்புடைய சமூக விரோதிகளை கைது செய்வதுடன், திருடப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதோடு, அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கித் தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT