பெரம்பலூர்

ஆக்கிரமித்துள்ள பொது இடத்தைமீட்டுத் தர வலியுறுத்தல்

25th Jan 2022 04:06 AM

ADVERTISEMENT

 பெரம்பலூா் அருகே தனிநபா் ஆக்கிரமித்துள்ள பொது இடத்தை மீட்டுதரக் கோரி, கிராம பொது மக்கள் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து பீல்வாடி கிராம பொதுமக்கள் சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

குன்னம் வட்டம், வேப்பூா் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்குள்பட்ட பீல்வாடி கிராமத்தில் மேற்கு எல்லையில் உள்ள பொது இடத்தில், மக்களிடமிருந்து நிதி திரட்டி சமுதாயக் கூடம் அமைப்பதற்காக தயாா் செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அறிவுறுத்தியும், இதுவரை அகற்றப்படவில்லை. சட்ட விதிமுறையை பயன்படுத்தி கொட்டகையை அகற்றி சமுதாயக் கூடம் கட்டுவதற்கு இடம் அளிக்க வேண்டும். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT