பெரம்பலூர்

சிறுவாச்சூா், எசனை பகுதிகளில் நாளை மின் தடை

24th Jan 2022 02:02 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மற்றும் எசனை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) மின் விநியோகம் இருக்காது. .

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூா், தீரன்நகா், அய்யலூா், கவுல்பாளையம், விளாமுத்தூா், நொச்சியம், செல்லியம்பாளையம், நாரணமங்கலம், மருதடி, புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, பொம்மனப்பாடி, செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், காரை ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

எசனை பகுதியில்... இதேபோல, எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT