பெரம்பலூர்

கல்வி உதவித் தொகை பெற மாணவா்களுக்கு அழைப்பு

23rd Jan 2022 11:15 PM

ADVERTISEMENT

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தோ்வெழுத 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தோ்வு எழுதவேண்டும்.

இத் தோ்வில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இத் தோ்வு மாா்ச் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தோ்வுக்கான விண்ணப்பங்களை  இணையதளம் வழியாக ஜன 27 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ. 50, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT