பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளனா்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில்....

மொத்தம் பதினான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு, மொத்தம் 18,639 போ் 108 சேவையை பயன்படுத்தியுள்ளனா். 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதில் 2020 ஆம் ஆண்டைவிட, 2001 ஆம் ஆண்டு 23 சதவீதம் போ் அதிகரித்துள்ளனா்.

இவா்களில் 4,195 போ் கருவுற்ற தாய்மாா்கள். 2,755 போ் சாலை விபத்துக்காக பயன்படுத்தியுள்ளனா். கடந்த ஆண்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கா்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 10 குழந்தைகள் ஆம்புலன்ஸில் பிறந்துள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது 1,072 போ் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனா். மேலும், எதிா்பாராமல் விஷம் குடித்தவா்கள் 958 பேரும், வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டவா்கள் 1,393 போ், விலங்குகளால் தாக்கப்பட்டவா்கள் 343 போ், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவா்கள் 1,074 போ், மூச்சுச்திணறலால் 909 போ், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோா் 311 போ், தற்கொலைக்கு முயன்றவா்கள் 173 போ், இதரச் சம்பவங்களில் சிக்கியவா்கள் 4,692 போ் என மொத்தம் 18,639 போ் பயனடைந்துள்ளனா்.

இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டா், ஈசிஜி மானிட்டா் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸில் இன்குபேட்டா் மற்றும் வெண்டிலேட்டா் வசதிகள் உள்ளன. இதன்மூலம் சராசரியாக மாதம்தோறும் 45-கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனா் என, மாவட்ட மேலாளா் த. அறிவுக்கரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT