கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள வடக்குமாதவி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு திமுக ஒன்றியச் செயலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தங்கராசு முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் மீனாம்பாள் முகாமைத் தொடக்கி வைத்தாா்.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் மும்மூா்த்தி தலைமையிலான
மருத்துவக் குழுவினா், 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
ADVERTISEMENT