பெரம்பலூர்

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

1st Jan 2022 11:36 PM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பூஜைகள், பிராா்த்தனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயில், பாடாலூா் வழிவிடு ஆஞ்சனேயா் கோயில், வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீசுவரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையிலுள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையிலுள்ள குற்றம் பொறுத்தீசுவரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில்

புத்தாண்டையொட்டி சிறப்புப் பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை: பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில், வட்டார முதன்மைகுரு ராஜமாணிக்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சிறப்புப் பிராா்த்தனைகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதே போல பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்று, வழிபாடு நடத்தினா்.

களையிழந்த சுற்றுலாத் தலங்கள்: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால் ரஞ்சன்குடி கோட்டை, லாடபுரம் மயிலூற்று அருவி, அரும்பாவூா் எட்டெருமைபட்டி அருவி, விசுவக்குடி

நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள், பொதுமக்கள் குறைந்தளவில் காணப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT