பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே கோயில் உண்டியல் திருட்டு

22nd Feb 2022 04:13 AM

ADVERTISEMENT

 பெரம்பலூா் அருகே கோயிலின் பூட்டை உடைத்து, உண்டியல் திருடிச் செல்லப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பொன்னகரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த நவம்பா் மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில், இக் கோயிலின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் உள்ளே சென்று, அங்கிருந்த உண்டியலை எடுத்துச் சென்றது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது. இந்த உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய சுமாா் ரூ. 25 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT