பெரம்பலூர்

குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயிலில் மாசி மகத் தேரோட்டம்

17th Feb 2022 01:36 AM

ADVERTISEMENT

 

குன்னம் அருகே..... சு. ஆடுதுறை கிராமத்திலுள்ள குற்றம் பொறுத்தீஸ்வரா் (அபராதரட்சகா்) கோயிலில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டுக்கான விழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி, புதன்கிழமை காலை பஞ்ச மூா்த்திகளுக்கு 18 வகையான மூலிகைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவா் திருத்தேருக்கு எழுந்தருளிய பின்னா், கிராம முக்கியஸ்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT