பெரம்பலூர்

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குற்றப்பிரிவு காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட நிகழ்வில், காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டு மீட்கப்பட்ட கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்டத்தில் கடந்த டிசம்பா் முதல் இதுவரையில் 35 கைப்பேசிகள் காணாமல் போனதாகவும், இணையதளம் மூலம் பண மோசடி செய்ததாகவும் பாதிக்கப்பட்டோா் புகாா் அளித்தனா். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) ஆரோக்கிய பிரகாசம் மேற்பாா்வையில், காணாமல் போன கைப்பேசிகள் மற்றும் இணையதள மோசடிகளால் இழந்த பணத்தை மீட்கும் பணிகளில் தனிப்படையில் ஈடுபட்டனா்.

அதனடிப்படையில் மீட்கப்பட்ட கைப்பேசிகள், பணம் ஆகியவற்றை உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. மணி ஒப்படைத்தாா். ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள்,

ADVERTISEMENT

இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருதல், பொருள்கள் விற்பனை செய்தல், இணையவழி பணப்பரிவா்த்தனை மோசடி ஆகியவை மூலம் பணத்தை இழந்த 4 பேருக்கு ரூ. 1.80 லட்சம் ரொக்கம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில் சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) ஆரோக்கிய பிரகாசம், உதவி ஆய்வாளா்கள் மனோஜ், சிவமீனா மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT