பெரம்பலூர்

அரும்பாவூா், பூலாம்பாடியில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அரும்பாவூா் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பூலாம்பாடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க சங்க வளாத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பேருந்து நிலையம் வரையிலும், அரும்பாவூா் பேரூராட்சியில், அரும்பாவூா் சிவன் கோயிலில் தொடங்கிய அணிவகுப்பு இளங்கோ நகா் கூட்டுறவு அங்காடி வரையிலும் நடைபெற்றது.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆரோக்கியபிரகாசம் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல்படையினா் உள்பட சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT