பெரம்பலூர்

லெனினிஸ்ட் வேட்பாளருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சின்னம் ஒதுக்கீடு

9th Feb 2022 01:01 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ஒதுக்கியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில், 7-வது வாா்டில் அதிமுக, திமுக, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உட்பட 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகி க. தா்மராஜ் போட்டியிடுகிறாா். இவருக்கு, கட்சி சின்னமான 3 நட்சத்திரத்துடன்கூடிய கொடி சின்னம் ஒதுக்கப்படாமல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான சுத்தி, அரிவாள், நட்சத்திரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சி அடைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ் கட்சியினா், சின்னத்தை மாற்றித் தருமாறு தோ்தல் அலுவலா்களிடம் செவ்வாய்க்கிழமை முறையிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT