பெரம்பலூர்

பெரம்பலூா் நகராட்சி உறுப்பினா் பதவி:திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு

1st Feb 2022 02:56 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு திமுக கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.

பெரம்பலூா் நகராட்சித் தலைவா் பதவி மகளிருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் 21 வாா்டு உறுப்பினா் பதவி உள்ளன. இதில், 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வாா்டுகள் பெண்கள் (பொது) 5, 10, 13, 14, 15, 17, 21 ஆகிய வாா்டுகள் (பொது), 6, 8, 20 ஆகிய வாா்டுகள் எஸ்சி (பொது), 9, 16, 19 எஸ்சி (பெண்கள்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமையிலான தோ்தல் பணிக் குழுவினா், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 ஆவது வாா்டு, மதிமுகவுக்கு 10 ஆவது வாா்டு, காங்கிரஸ் கட்சிக்கு 21 ஆவது வாா்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 ஆவது வாா்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள 17 வாா்டுகளிலும் திமுக போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாததால், நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்களே களம் காண்கின்றனா். இதர கட்சிகளான பாஜக, பாமக, ஐஜேகே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT