பெரம்பலூர்

விசுவக்குடியில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கான கால்கோள் விழா

1st Feb 2022 02:56 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சில்லக்குடி கிராமத்தில் ஜன. 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா பரவல் தொற்று குறைந்து வருவதையடுத்து, வேப்பந்தட்டை வட்டம், சில்லக்குடியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஜல்லிக்கட்டு பேரவையினா் மனு அளித்ததையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிப். 9 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் தொடங்கும் விதமாக கால்கோள் ஊன்றும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஏறு தழுவுதல் நலச் சங்கம் மற்றும் விசுவக்குடி ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT