பெரம்பலூர்

6,546 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 28.76 கோடி கடனுதவி: போக்குவரத்துத் துறை அமைச்சா் வழங்கினாா்

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், 532 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 6,546 பேருக்கு ரூ. 28.76 கோடி கடனுதவிகள் அளித்து அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:

சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 121 ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புகளில் 3,906 மகளிா் சுய உதவிக்குழுக்களும், நகா்ப்புற பகுதிகளில் 13 பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் 654 மகளிா் சுய உதவிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021-22 ஆண்டில் 5,908 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 264.29 கோடியும், நடப்பு 2022- 23 நிதியாண்டில் இதுவரை 3,373 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 140.77 கோடி வங்கி நேரடிக் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, திட்ட இயக்குநா்கள் கருப்பசாமி, (மகளிா் திட்டம்), லலிதா (ஊரக வளா்ச்சி முகமை), நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் த. பாண்டியன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT