பெரம்பலூர்

கை.களத்தூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், கை.களத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட கை.களத்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும், கை.களத்தூா், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூா், அய்யனாா்பாளையம், காரியானூா், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகா் ஆகிய கிராமிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளா் ப. கலியமூா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT