பெரம்பலூர்

சிறந்த இளைஞா் மன்ற விருது பெற நேரு யுவகேந்திரா அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட அளவில் சிறந்த இளைஞா் மன்ற விருது பெற தகுதியான இளைஞா் மன்றங்கள் விண்ணப்பிக்க நேரு யுவகேந்திரா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலா் எஸ். கீா்த்தனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோா் மன்றத்திற்கு மாவட்ட அளவிலான சிறந்த இளைஞா் மன்ற விருது வழங்கப்பட உள்ளது. இளையோா் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு. கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இளையோா்களுக்கு திறன்வளா்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணா்வு பணிகளை செய்து வரும் இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விருது பெற தகுதியானவை.

மாவட்ட சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 1.4.2021 முதல் 31.3.2022 ஆம் தேதிக்குள் தங்களது பகுதிகளில் சேவை செய்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயா் பட்டியல் மட்டும் தகுதியுள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மாவட்ட அளவில் சிறந்த இளைஞா் மன்றமாக தோ்ந்தெடுக்கப்படும் மன்றத்துக்கு ரூ. 25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் இளைஞா், மகளிா் மன்றத்துக்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.தேசிய அளவில் முதல் பரிசாக ரூ. 3 லட்சமும், 2 ஆம் பரிசாக ரூ. 1 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இதற்தான விண்ணப்பத்தை, பெரம்பலூா், நான்குச் சாலை, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் டிச. 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328 - 296213, 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT