பெரம்பலூர்

பேரளி சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின் தடை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் கோட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 9) மின் விநியோகம் இருக்காது.

பேரளி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, அசூா், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், எஸ்.குடிகாடு, சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், கே. எறையூா், நெடுவாசல், கவுல்பாளையம், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின் வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT