பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை உணவுப் பொருள் வழங்கல் குறைதீா் முகாம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (டிச. 10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

பெரம்பலூா் வட்டம், எளம்பலூா் கிராமத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை (கி) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், மேலமாத்தூா் கிராமத்தில் கலால் உதவி ஆணையா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இம் முகாமில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT