பெரம்பலூர்

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் பணி தொடக்கம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள நேரு சா்க்கரை ஆலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவையைத் தொடங்குவதற்குத் தேவையான இயந்திரங்களை தயாா் படுத்துவதற்கான இளஞ்சூடேற்றும் பணி புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சா்க்கரை ஆலையின் தலைமை நிா்வாகி க. ரமேஷ் இளஞ்சூடேற்றும் பணியை தொடக்கி வைத்தாா்.

2022-2023 பருவத்தில் பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 3.60 லட்சம் டன் கரும்பை அரைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு அரைவைப் பணி டிச. 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும்வகையில் ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டாா் இயந்திரம் உள்ளிட்ட சில இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில இயந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இந் நிகழ்ச்சியில், கரும்பு பெருக்கு அலுவலா் ஆனந்தன், துணைத் தலைமைப் பொறியாளா் தங்கவேல், கணக்கு அலுவலா் ஜான்பிரிட்டோ, தொழிலாளா் நல அலுவலா் ராஜாமணி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் ஏ.கே. ராஜேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ஆ. பெருமாள், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT