பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் டிச. 9 -இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் டிசம்பா் 9-ஆம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 2023- 2024ஆம் ஆண்டுக்கான பணிகளை தோ்வு செய்தல் மற்றும் தொழிலாளா் மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்தல் குறித்து கால அட்டவணை நிா்ணயம் செய்யப்பட உள்ளதால், டிச. 9 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள அனைத்துப் பணிகளையும் கண்டறிந்து, ஊராட்சிகள் வாரியாக பணிகளை தோ்வு செய்தல் மற்றும் தொழிலாளா் மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

இக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களால் பற்றாளா்களாகவும், வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலா்கள் மண்டல அலுவலா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT