பெரம்பலூர்

எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழா

7th Dec 2022 01:05 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 40 ஆவது ஆண்டு தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி,செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகாதீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊா்வலமாக பிரம்ம ரிஷி மலைக்கு கொண்டுவரப்பட்டது.

தொடா்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரம் மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில், ஸ்ரீ நாராயண தீா்த்த மகா சுவாமிகள் தீபத்தை ஏற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

விழாவில் பங்கேற்ற சாதுக்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ் விழாவில், மனித உரிமைகள் கழக பொதுச் செயலா் சுரேஷ் கண்ணன், சென்னை ஜெகத் ராம்ஜி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத் தலைவா் ராஜேஷ், அரசு வழக்குரைஞா் சுந்தரராஜன், மருத்துவா் ராஜாசிதம்பரம், ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூா் குரு கடாட்ஷம் மெய்யன்பா்கள் செய்திருந்தனா்.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT