பெரம்பலூர்

விற்பனையாளா், கட்டுநா் பணித் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கலாம்

7th Dec 2022 01:08 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளோா் இணைய தளத்தில் தங்களது அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளா்கள் மற்றும் 2 கட்டுநா்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிச. 15 முதல் 26 ஆம் தேதி வரையிலும், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிச. 27 ஆம் தேதியும் பெரம்பலூா் - துறையூா் சலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெற உள்ளது.

நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை பெரம்பலூா் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் நோ்முகத் தோ்வுக்கான அனுமதி சீட்டை விண்ணப்பதாரா் கொண்டு வந்தால் மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT