பெரம்பலூர்

கழிவறையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

7th Dec 2022 01:06 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புகா் பகுதியில் கழிவறையில் தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் துறைமங்கலம் வாசுகி தெருவைச் சோ்ந்த சமயன் மகள் சத்யா (32). சிறிது மன நலன் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இவா்,

திங்கள்கிழமை இரவு வீட்டிலுள்ள கழிப்பறைக்குச் சென்றாராம்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோா் கதவை உடைத்து பாா்த்தபோது, சத்யா கழிவறையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்துக் கிடந்துள்ளாா். அவரை மீட்ட பெற்றோா், சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT