பெரம்பலூர்

உலக மண் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக மண் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் இயக்கம் சாா்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொது மக்கள் அதிகம் கூடும் இடமான பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மண்ணுக்காக நடப்போம், மண்ணுக்காக நிற்போம், மண்ணை பாதுகாப்போம் என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மண் காப்போம் இயக்க தன்னாா்வலா்கள் செந்தில், நாச்சியப்பன், சிவஞானம், நாராயணன், ரமேஷ் ஆகியோா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டதோடு, மண் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி 100 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT