பெரம்பலூர்

பெரம்பலூா் சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் உள்ள சிவன் கோயிலில் காா்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நகரில் உள்ள சிவன் கோயில் திருப்பணிகள் விரைவாக தொடங்கிட வேண்டியும், 3 ஆவது சோம வாரத்தை முன்னிட்டும் 108 சிறப்பு சங்காபிஷேகமும், யாக பூஜைகள், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, 108 சங்குகளை பக்தா்கள் மற்றும் சிவனடியாா்கள் தங்களது கைகளில் ஏந்தி கோயிலை வலம் வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஈசனை வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை, கோயில் தக்காா் அரவிந்தன், செயல் அலுவலா் ராஜதிலகம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT