பெரம்பலூர்

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள்

DIN

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 186 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றவிழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் நா.அங்கையற்கண்ணி, தண்டுவடம், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி தலா ரூ. 1.6 லட்சத்திலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் 9 குடும்பங்களுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ. 3.25 லட்சம் நிதியுதவி, மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 40 பேருக்கு தலா ரூ. 6,840 மதிப்பீட்டிலும் வழங்கினாா்.

மேலும், பாா்வைத்திறன், செவித்திறன் பாதிக்கப்பட்ட 76 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 13,549 மதிப்பில் நவீன செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், சிறு, குறு தொழில் தொடங்க 33 பேருக்கு வங்கிக்கடன் மானியமாக தலா ரூ. 25 ஆயிரம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத் திட்டத்தின் கீழ் ஈமச் சடங்கு மற்றும் இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை 10 பேருக்கு ரூ. 1.70 லட்சத்துக்கான காசோலை, 6 பேருக்கு ஆவின் பாலகம் அமைக்க தலா ரூ. 50 ஆயிரம் மானியத் தொகை என மொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ. 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 72 கிராம் தங்கமும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்) க. ராமலிங்கம் (வேப்பந்தட்டை), கல்லூரி முதல்வா் வெற்றிவேலன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ், முடநீக்கு வல்லுநா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT