பெரம்பலூர்

பிரம்ம ரிஷி மலையில் நாளை காா்த்திகை தீப திருவிழா: 2 ஆயிரம் மீட்டா் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2 ஆயிரம் மீட்டா் திரி தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 40 ஆவது ஆண்டு தீபத் திருவிழா டிச. 6 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இவ் விழாவில் 2 ஆயிரம் மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் சாதுக்களுக்கு காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

திரி தயாரிக்கும் பணியில் மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி, தவ யோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் அறக்கட்டளை மெய்யன்பா்கள் ஈடுபட்டுள்ளனா்.

டிச. 6 ஆம் தேதி காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகா தீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊா்வலமாக பிரம்ம ரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூா் குரு கடாட்ஷம் மெய்யன்பா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT