பெரம்பலூர்

அரசுப் பணியாளா்களுக்கு பொது மருத்துவ முகாம்

DIN

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் அரசுப் பணியாளா்களுக்கான பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மீனாம்பாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தாதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டாலின் செல்வக்குமாா், அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லலிதா முகாமை தொடக்கி வைத்தாா்.

இதில் பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்டகிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களுக்கு, மருத்துவா்கள் சூரியகுமாா், ராம் விவேக், பிரபு, புஸானா, பாபுஸ்ரீ ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனா். முகாமில், 120 ஆண்களும், 160 பெண்களும் என மொத்தம் 280 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT