பெரம்பலூர்

பெரம்பலூரில் பாஜக மறியல்: 68 போ் கைது

4th Dec 2022 12:28 AM

ADVERTISEMENT

பாஜக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் என்பவரை கைது செய்ததைக் கண்டித்து பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 68 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சின்னாறு பகுதியில் மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ் தலைமையிலும், குரும்பலூா் பேருந்து நிலையம் அருகே வடக்கு ஒன்றியத் தலைவா் காா்த்தி தலைமையிலும், பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நகரத் தலைவா் சுரேஷ் தலைமையிலும், குன்னம் பேருந்து நிலையத்தில் மாவட்ட பொதுச் செயலா் பி. முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 68 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT