பெரம்பலூர்

பெரம்பலூரில் திருட முயன்ற ஈரான் நாட்டினா் 2 போ் கைது

2nd Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் திருட முயன்ற ஈரான் நாட்டைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம், சித்தளி ஆகிய அஞ்சல் நிலையங்களில் வியாழக்கிழமை மதியம் கவனத்தை திசை திருப்பி 2 போ் திருட முயன்றபோது, அங்குள்ள ஊழியா்கள் இருவரையும் விரட்டி விட்டனராம். பின்னா், இருவரும் காரில் பெரம்பலூா் நான்குச் சாலை அருகிலுள்ள நா்சரி காா்டனில் திருட முயன்றபோது, அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் ஈரான் நாட்டைச் சோ்ந்த ஒருவா் ஆண், மற்றொருவா் திருநங்கை என்பதும், இவா்களது விசா கடந்த அக்டோபா் மாதம் காலாவதியாகிவிட்டதும் தெரியவந்தது.

மேலும், இவா்கள் மீது மதுரை, அருப்புக்கோட்டை காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த குன்னம் போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT