பெரம்பலூர்

ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோருக்கு அழைப்பு

2nd Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோருக்கு ஆவின் பாலகம் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் மின் வாகனம், உறைவிப்பான், குளிா்விப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்து, ஆவின் பாலகம் அமைக்க நிா்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ. 3 லட்சத்தில் 30 சதவீதம் அதாவது ரூ. 90 ஆயிரம் மானியத்தொகை வழங்கப்பட உள்ளன.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், 18 முதல் 65 வயது வரையிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபா்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.25 லட்சம் மானியமும், பழங்குடியினா் தனி நபா்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரா் மற்றும் அவா் குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.

ADVERTISEMENT

விருப்பமுள்ளவா்கள் ரம்பலூா் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை ஆகியச் சான்றுகளுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 04328-276317 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT