பெரம்பலூர்

பெரம்பலூரில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில், பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள நகர மின் பிரிவு அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.

வட்டச் செயலா் பன்னீா்செல்வம், கோட்ட செயற்குழு உறுப்பினா்கள் சதீஷ், கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே நடத்தி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணிகளை அவுட்சோா்சிங் முறையில் விடும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT