பெரம்பலூர்

பெரம்பலூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

2nd Dec 2022 12:44 AM

ADVERTISEMENT

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ், டெங்கு மற்றும் மனிதநேய விழிப்புணா்வு பேரணி பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ.ஏ. குழந்தைராஜன், பள்ளி தலைமையாசிரியா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் ந. அங்கையா்கண்ணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா் .

இப் பேரணியில் பங்கேற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 690 மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி எய்ட்ஸ் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி, தேரடி, கனரா வங்கி, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதில், இளையோா் செஞ்சிலுவை சங்க பொருளாளா்கள் கருணாகரன், ராஜா, இணை ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணராஜ், துரை, ரகுநாதன், மண்டல அலுவலா்கள் காசிராஜா, தேவேந்திரன், ஆனந்தகுமாா், செல்வசிகாமணி, ஜெயக்குமாா், செல்வகுமாா், நல்லதம்பி ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் வி. ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக, அமைப்பாளா் மு. ஜோதிவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT