பெரம்பலூர்

டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழகஅரசின் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் நலத் துறையில் நிகழாண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் பெயரில், பட்டியலின முன்னேற்றத்துக்காக அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் ‘டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது’ 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

எனவே, பட்டியலின முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளா்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்களில் தகுதியான நபா்கள் இருந்தால், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, டிச. 12 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் - 621212 என்னும் முகவரிக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT