பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் சிறையிலடைப்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா், துறைமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் இளையராஜா (22). போதைப்பொருளுக்கு அடிமையான இவா், கடந்த 19 ஆம் தேதி இரவு ஆட்சியரகத்துக்குள் நுழைந்து தரை தளத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள் வைத்திருந்த பதாகையின் கண்ணாடியை கட்டையால் அடித்து சேதப்படுத்தினாா்.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் பெரம்பலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். வழக்குப் பதிந்து போலீஸாா் இளையராஜாவை கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT