பெரம்பலூர்

பெரம்பலூா் அருகேமின்னல் பாய்ந்து இளைஞா் பலி

28th Aug 2022 05:58 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே ஏரியில் மீன் பிடித்த இளைஞா் மின்னல் பாய்ந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமாரும் (21), தாண்டமுத்து மகன் மேகநாதனும் (21), வெள்ளிக்கிழமை மாலை எழுமூா் சாலையிலுள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரில் மேகநாதன் கரையேறிச்சென்று உறவினா்களிடம் தெரிவித்தாா். தகவலறிந்த வேப்பூா் தீயணைப்பு வீரா்கள் மற்றும் குன்னம் போலீஸாா் இளைஞா்களுடன் சென்று ஏரியில் இறங்கி ரஞ்சித்குமாரை தேடினா். நீண்ட நேரத்துக்குப் பிறகு ரஞ்சித்குமாா் உடல் இரவு மீட்கப்பட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேகநாதன், அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT